பிரேக்குகளும் சில பயணங்களும்...
எதுவுமே இல்லாதபோதுதான் அருமை தெரியுங்கறது
சரியாத்தான் இருக்கு. தினம் தினம் காலைலேயே எழுந்து அரை தூக்கத்தோட (சில பல சமயம்
அரை மனசோட) கல்லூரிபேருந்துல ஏறினா புழுதிலேந்து காப்பாத்திக்க முகத்துல
துப்பட்டாவைக் கட்டிக்க அலுப்பா இருக்கும்தான். ஆனா விடுமுறைல இருக்கும்போதுதான்
தெரியுது பேருந்து பயணங்கள் எவ்வளவு சுகமானதுன்னு.
கல்லூரி விடுதியில தாங்காம வீட்டிலேர்ந்து
போறதால நான் நிறைய அனுபவங்களை மிஸ் பண்ணி இருக்கேன்.நண்பர்களோட நாடு ராத்திரி
வரைக்கும் ஆட்டம் பாட்டம்னு கொட்டம் அடிக்கறது...நல்ல இல்லன்னு திட்டிகிட்டே மெஸ்
சாப்பாட ஒரு கை பாக்கறது...சாயந்தரம் அப்படியே ஒரு வாக் போறது...இப்படின்னு
எவ்வளவோ என் ஆசைகள் நிறைவேறாம போயிருக்கு. ஆனா எனக்கு கெடச்ச பேருந்து
அனுபவங்கள்...எந்த ஒரு மாணவர்க்கும் கெடச்சு இருக்காது! பேருந்து பயணம்..அது ஒரு
தனி சுகம்! திங்களும் வெள்ளியும் எல்லார் கைலயும் புக்ஸ், ஜெராக்ஸ் காபிகள்
இல்லேன்னா ஸ்மார்ட் போன்ல பி.டி.எப். கண்டிப்பா இருக்கும். மத்த நாள் எல்லாம்
கதையே வேற! சிலர் கையில reader’s
digest..சிலர் கையில chetan bhagat, ravinder singh மாதிரி
மசாலா லவ் ஸ்டோரீஸ்..(டீன் ஏஜெர்ஸ் ஆச்சே).. காதுல இயர் போன். சுங்கச்சாவடில வேற
காலேஜ் மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியா பாக்கறாங்கன்னு தெரிஞ்சே வெட்டி சீனுக்காக
காதுல இயர் போனை மாட்டிக்கிட்டு, டச் போனை கொஞ்சம் ஜன்னலுக்கு மேல துக்கி
வச்சுக்கிட்டு, அப்டியே தலைல போட்டு இருக்கற கிளிப்பை எடுத்து விட்டு ப்ரீ ஹேரை
காத்துல பறக்க விட்டு...நல்லா சாஞ்சு உட்கார்ந்து கால் மேல கால் போடறது. (எங்க
காலேஜ்ல ஜீன்ஸ் போட்டுக்கலாமே.....உங்களுக்கு எல்லாம் கெடயாதே....அப்டீன்னு
வெறுப்பேத்ததான் ;P ). இதுல பசங்க யோ யோ லுக் கொடுக்க கொஞ்சம் ரொம்பவே மெனக்கெடுவாங்க.
சாயந்தரம் அலப்பறை கேக்கவே வேண்டாம். ரோட்ல நிக்கற traffic police எட்டிப் பாக்கற அளவுக்கு கத்திக் கத்தி மாபியா,
டம் ஸீ, லிட் எல்லாம் விளையாட வேண்டியது! இந்த மாதிரி சின்ன சின்ன அனுபவங்கள்
இருந்தாலும் நான் ரொம்ப ரசிச்சது டிரைவர் போடற பிரேக்குகள்தான். எங்க பஸ்ஸை
கரகாட்டக்காரன் காரை வெச்சிருந்த சொப்பனசுந்தரியோட ஒன்னு விட்ட அக்கா
வெச்சிருந்தாங்க. அதை அப்படியே அதே கண்டிஷன்ல என் காலேஜ் வாங்கி என் ரூட்ல விட்டுட்டாங்க.
ஸ்டாப்புக்குப் பதிமூணு அடி முன்னாடி பிரேக் போடா ஆரமிச்சாதான் ஸ்டாப்க்கு அஞ்சரை
அடி தள்ளி நிக்கும். இதுலயும் எங்க டிரைவர்க்குப் பேராசை. அடிக்கடி சடன் பிரேக்
போட்டு ஹீரோயிசம் காட்டணும்னு. நல்லா காலையில அடிக்கற காத்துல தூக்கம் சொக்கும்.
அப்படியே காதுல கேக்கற பாட்டு கூட உறைக்காத அளவுக்கு தூங்கின அன்னிக்கு லேப்
எதாவது கான்செல் ஆனா மாதிரி ஒரு கனவு வரும். அது பொறுக்காது அந்த டிரைவர்க்கு.
படக்குன்னு ஒரு சடன் பிரேக் போடுவார். முன்னாடி செஅட் கம்பியில போய் தலை
முட்டிக்கும். தூக்கமும் போச்சு.....கனவும் போச்சு..முதல் சீட்ல கதவுக்கு நேரா
உட்கார்ந்து இருந்தா மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் கதைதான். விக்கெட்டை
காப்பாத்திக்கவே சரியாப் போய்டும்..! சாயந்தரம் அதுக்கு மேல! விளையாடிட்டு
இருக்கும்போது சடன் பிரேக் போட்டு....ஒருத்தர் மேல இன்னொருத்தர் விழுந்து...நடுவுல
இருக்கற கம்பியில போயி முட்டிகிட்டு...சீட்ல இருக்கற பேக் எல்லாம் உருண்டு கீழ
விழுந்து..அஞ்சு நொடில அலங்கோலம் ஆகிடும். இதுல ஒரு நாள் ஒரு பொண்ணு கீழ விழப்
போக, வளையோச பாட்டுல வர்ற கமல் மாதிரி (அப்படீன்னு அவனுக்கே நெனப்பு) ஒரு பையன்
அவள தாங்கிப் பிடிக்க...அடுத்த ரெண்டு நாள்ல புதுசா ஒரு ஜோடிய உருவாக்கி காபி
ஷாப்கும் பீச் கடலை விக்கறவனுக்கும் பிசினஸ் ஏத்தி விட்டு சமூக சேவை செஞ்ச
புண்ணியம் அந்த பிரேக்குக்கு.
அப்பப்போ தன்னோட இருப்பை காட்டிக்க தண்டவாளத்துல
அடிப்பட்ட நாய்க்குட்டி மாதிரி ஒரு சத்தம் போடும். ஆனா அந்த சதம் இல்லாம இப்போ
எல்லாம் பேருந்து பயணம் உற்சாகமாவே இருக்கறதில்ல. இன்னும் ஒரு வருஷத்துல என்னோட
இந்த பேருந்தையும் பிரேக்கையும் விட்டுப் பிரிஞ்சாலும் என்னிக்கும் என் மனசுல
சத்தம் போட்டுகிட்டே இருக்கும்....நாய்க்குட்டி பிரேக்!!